லூனா 25 விண்கலம்
லூனா 25 விண்கலம்Twitter

“லூனா 25ன் விண்வெளி பயணம் இனிமையாக இருக்கட்டும்!”- இஸ்ரோ வாழ்த்து!

47 வருடங்களுக்கு பிறகு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது ரஷ்யா.
Published on

நிலவை நோக்கி ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் சோயுஸ் - 2 ராக்கெட் மூலம் விண்ணில் இந்திய நேரப்படி இன்று காலை 4:40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. லூனா 25ன் விண்வெளி பயணம் இனிமையானதாக இருக்கட்டும் என இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. 

1976 ஆம் ஆண்டு ரஷ்யா முதல் முதலாக நிலவிற்கு விண்கலம் அனுப்பிய நிலையில் 47 வருடங்களுக்கு பிறகு ரஷ்யா நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக விண்கலம் ஒன்றை அனுப்பியது. லூனா 25, 5 முதல் 7 நாட்களில் நிலவின் தென் துருவ  பகுதியில் தரையிறங்கும் என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

லூனா 25 திட்டம் 2021 ஆம் வருடமே செயல்படுத்த வேண்டியது என்றும் கொரோனா, உக்ரைன் போர் காரணமாக தள்ளிப்போனது என்றும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 1800 கிலோ எடை கொண்ட லூனா 25-ன் செயற்கைக்கோள் நிலவின் தென் துருவப் பகுதியியில் தரையிறங்கி நிலவின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டிகள், கனிமங்கள், எரிபொருள் ஆக்சிஜன், குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்வதை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

லூனா 25 | Luna 25
லூனா 25 | Luna 25

சந்திராயன் விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கும் நிலையில் வரும் 14 ஆம் தேதி மூன்றாவது முறையாக சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து உயரம் குறைக்கப்படும். ஆகஸ்ட் 17ஆம் தேதி விண்கலத்தின் உந்துவிசைக்கலன் மற்றும் லேண்டர் தனியாக பிரிந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5:47க்கு நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் சோயுஸ்-2 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 11ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4 40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

லூனா 25 விண்கலம்
சந்திரயான் 3 எடுத்த பூமி - நிலாவின் புகைப்படங்கள்! என்ன ஸ்பெஷல்?

ரஷ்யாவின் நிலவை நோக்கிய லூனா 25 விண்கலம், மாஸ்கோவில் இருந்து 5,500 கிலோமீட்டர் கிழக்கில் இருக்கும் வொஸ்டோச்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்கு அனுப்பப்பட்டது.

சந்திரயான் 3 விண்கலத்திற்கு முன்னதாக லூனா 25 நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்படுகிறது. லூனா 25 போல 26, 27, 28 என தொலைநோக்கு திட்டங்களும் ரஷ்யா வைத்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் லூனா 25 திட்டத்திற்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து லூனா 25 நிலவை நோக்கிய பயணம் இனிமையாக அமையட்டும் என்றும் விண்வெளி பயணத்தில் சந்திப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com