சந்திரயான்-3: லேண்டர் மற்றும் ரோவரை இயக்க புதிய தொழில்நுட்பம் - இஸ்ரோ புதிய தகவல்

சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர் மற்றும் ரோவர் 14 நாட்கள் செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் அவை மேலும் சில நாட்கள் இயங்க இஸ்ரோ மற்றொரு புதிய திட்டத்தை வைத்திருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர் மற்றும் ரோவரில் 7 விதமான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டரும் ரோவரும் சூரிய மின் ஆற்றல் மூலம் இயங்கும் நிலையில், நிலவின் பகல் பொழுதான 14 நாட்கள் மட்டுமே அதனால் இயங்க முடியும் என சொல்லப்பட்டிருந்தது. இதனால் அனைத்து அறிவியல் ஆய்வுகளையும் 14 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் லேண்டர் மற்றும் ரோவருக்கு இருந்துவந்தது.

chandrayaan 3
chandrayaan 3pt web

இந்நிலையில் 14 நாட்களை கடந்தும் லேண்டர் மற்றும் ரோவர் இயங்குவதற்காக புதிய தொழில்நுட்ப முறையை விஞ்ஞானிகள் அவற்றில் இணைத்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நிலவில் பகல் பொழுது இருக்கும் நாட்களில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், லேண்டர் மற்றும் ரோவரில் ஒரு குறிப்பிட்ட எடை கொண்ட பேக்அப் பேட்டரி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சூரிய மின் தகடு மூலம் அடுத்து 14 நாட்களில் மின்சாரத்தை சேகரிக்க வைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி முழு தகவல்களை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com