அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட்

அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட்
அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட்

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம், புவி கண்காணிப்பு மற்றும் வானிலை ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள், மார்ச் மாதம் ஐந்தாம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் வரும் ஆண்டில் 10 கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ இஸ்ரோ சார்பில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக ஜி-சாட்- 1 மார்ச் மாதமும், ஜி-சாட்-2 ஜூன் மாதமும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி ஜி-சாட்-1 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி- எப்10 ராக்கெட், 14-வது முறையாக விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, மார்ச் மாதம் 5ஆம் தேதி மாலை 5.43 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இரண்டாயிரத்து 275 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் புவியை கண்காணிக்கவும், வானிலை ஆய்வுகளுக்காகவும் விண்ணில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com