சந்திரயான் 3 | "திரும்பி வா.. எழுந்து வா.." லேண்டர், ரோவர்-க்காக காத்திருக்கும் ISRO விஞ்ஞானிகள்

சந்திரயான் 3 விண்கலத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான இறுதிக் கட்ட முயற்சிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
இஸ்ரோ
இஸ்ரோபுதிய தலைமுறை

மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நிலையில் இரவுப் பொழுதில் உறங்கிய விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் விழித்தெழுமா என காத்திருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

ஆய்வு முடிவுகளோடு திட்டமிட்டபடி 14 நாட்கள் சிறப்பாக செயல்பட்டு 100% வெற்றி பெற்ற நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி விண்கலம் நிலை கொண்டுள்ள மான்சினஸ் பள்ளத்தாக்கிற்கு அருகே இரவுப் பொழுது தொடங்கியதால் லேண்டரும் ரோவரும் ஸ்லீப் மோடுக்கு சென்றன.

இஸ்ரோ
சந்திரயான் 2ன் கண்காணிப்பில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர்- இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
சந்திரயான் 3
சந்திரயான் 3 புதிய தலைமுறை

ஸ்லீப் மோடுக்கு செல்வதற்கு முன்பாக லேண்டரிலும் ரோவரிலும் இருக்கும் 738 வாட் பேட்டரி மற்றும் 50 வாட் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டன. மேலும் நிலவின் மேற்பரப்பில் மீண்டும் தரையிறங்கும் விதமாக "ஹாஃப் டெஸ்ட்" எனப்படும் தாவிக் குதித்தல் நிகழ்வு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

இரவுப் பொழுதில் நிலவில் மைனஸ் 150 டிகிரியில் இருந்து மைனஸ் 250 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும் என்பதால் விண்கலத்தில் உள்ள அறிவியல் ஆய்வுக் கருவிகள் மூடிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஸ்லீப் மோடுக்கு சென்ற லேண்டரும் ரோவரும் 13 நாட்களாக உறங்கின. செப்டம்பர் 21ஆம் தேதி காலை 10:45 மணிக்கு சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவர் இருக்கும் பகுதியில் 6 டிகிரி கோணத்தில் சூரிய உதயம் ஆரம்பமானது. இதையடுத்து லேண்டரில் இருந்து சமிக்ஞைகள் வருமா என பெங்களுரு கட்டளை மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இஸ்ரோ
`இந்த முறை நிலவில் தரையிறக்காமல் விடமாட்டோம்...’ சந்திராயன் 3 பற்றி இஸ்ரோ தலைவர் பேட்டி
சந்திரயான் 3
சந்திரயான் 3pt web

லேண்டர் மற்றும் ரோவரின் இரவுப் பொழுது, வெப்ப நிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததால் அதன் பாகங்கள் இயல்பு நிலையை இழந்து இருப்பதாகவும் எனவே விண்கலத்தின் வெப்பநிலை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும். கூறப்படுகிறது.

அதே நேரத்தில் விண்கலத்தில் ஏற்கெனவே பேக்கப் சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நிலவின் வெப்ப நிலை மாறுபாட்டில் அதனால் ஈடு கொடுக்க முடிந்ததா என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று காலை 10:45 மணியில் இருந்து நிலவின் தென் பகுதியில் உள்ள சந்திரயான் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். எந்தவித சமிக்ஞையும் இதுவரை வராத நிலையில் முயற்சிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com