டெக்
"ஆய்வுப்பணியை தொடங்கியது ஆதித்யா L1..." அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ!
ஆதித்யா எல்.1 விண்கலம் தனது ஆய்வுப்பணியை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதித்யா எல்.1 விண்கலம் தனது ஆய்வுப் பணியை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்கலத்தின் அறிவியல் ஆய்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

aditya l1, Lagrange Point 1pt web
STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ. தொலைவிலுள்ள அதிவெப்ப ஆற்றலை அளவிட தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 6 சென்சார்களைக் கொண்ட STEPS கருவி வெவ்வேறு திசைகளில் கண்காணிக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.