வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்
Published on

போக்குவரத்து மற்றும் வழிகாட்டு தகவலுக்கு உதவும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி- சி41 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 1,425 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்தபடி, சரியாக இன்று அதிகாலை 4 மணி 4 நிமிடங்களுக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து மற்றும் வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்த செயற்கைக்கோள் தருமெனவும், இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்த சிலநிமிடங்களில் வெற்றிப்பாதையில் செல்வதாக தெரிவித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். மேலும் விஞ்ஞானிகள் அனைவருக்கும் இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com