சாலைகளில் பயணிக்கும்போதே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்..

சாலைகளில் பயணிக்கும்போதே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்..

சாலைகளில் பயணிக்கும்போதே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்..
Published on

எலெக்ட்ரிக் வாகனங்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்யும் சாலைகளை அமைக்கும் பணியில் இஸ்ரேல் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள் தயாரிப்பை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்தவகை கார்களை சார்ஜ் செய்துகொள்ள அதிகநேரம் செலவாகும் என்பதே ஒரு குறையாக இதுவரைக் கூறப்பட்டு வந்தது. சாலைகள் மூலம் அந்த குறையை நிவர்த்தி செய்ய இஸ்ரேலைச் சேர்ந்த ’எலெக்ட்ரோட்’ (Electroad) எனும் நிறுவனம் புதிய தீர்வை முன்வைத்துள்ளது. எலெக்ட்ரிக் கார்கள் பயணிக்கும் போது ஒயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் உதவியுடன் சாலைகள் மூலம் சார்ஜ் செய்யும் முறை குறித்து அந்த நிறுவனம் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளது. கிட்டத்தட்ட இறுதி வடிவத்தினை எட்டியுள்ள இந்த முறை மூலமாக சாலைகளின் நடுவே ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மின் இணைப்பு மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என்றும் அந்த நிறுவனம் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சாலைகளைத் தோண்டி அமைக்கப்படும் காயில்கள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் இண்டக்‌ஷன் முறை மூலமாக வாகனங்களை சார்ஜ் செய்வதில் ஆய்வாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். இந்த ஆய்வின் அடுத்தகட்டமாக சோதனை முறையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர சாலைகளில் இந்த சார்ஜிங் முறையை அமல்படுத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com