லிக்விட் கூலிங், Snapdragon 695 ப்ராசஸர்: இந்தியாவில் வெளியான iQoo-வின் புதிய ஸ்மார்ட்போன்

லிக்விட் கூலிங், Snapdragon 695 ப்ராசஸர்: இந்தியாவில் வெளியான iQoo-வின் புதிய ஸ்மார்ட்போன்
லிக்விட் கூலிங், Snapdragon 695 ப்ராசஸர்: இந்தியாவில் வெளியான iQoo-வின் புதிய ஸ்மார்ட்போன்
iQoo நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ப்ரீமியம் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் மட்டுமே பெரும்பாலும் கவனம் செலுத்தி வந்தது iQoo நிறுவனம்.  தற்போது இருபதாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் iQOO Z6 5G என்ற ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. 
மீடியம் பட்ஜெட் ஸ்மார்ட்போன்க்களில் AMOLED வகை டிஸ்ப்ளேக்கள்  பிரபலமாகி வரும் வேளையில் இந்த ஸ்மார்ட்போனில் LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.58 இன்ச் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட IPS LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. Samsung ISOCELL JN1  சென்ஸார் கொண்ட 50 MP மெயின் கேமரா  மற்றும்  16 MP ஃப்ரன்ட் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொபைல் பயன்படுத்தும்போது ஏற்படும் வெப்பத்தைக் குறைக்கும் வகையில் 5 லேயர் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக iQoo நிறுவனம் தெரிவித்துள்ளது.
Qualcomm Snapdragon 695  ப்ராசஸர் மற்றும் LPDDR4X ரேம் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி  இருக்கிறது மேலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 4GB+128GB மாடல் 15,499 ரூபாயாகவும், 6GB+128GB மாடல் 16,999 ரூபாயாகவும் மற்றும் 8GB+128GB மாடல் 17,999 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் வரும் 22-ம் தேதி முதல் அமேஸான் இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது.
- மு. ராஜேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com