மார்ச் 8 ஆப்பிள் நிகழ்வில் ஐபாட் ஏர் மற்றும் ஐபோன் SE: எப்போது அறிமுகம்?

மார்ச் 8 ஆப்பிள் நிகழ்வில் ஐபாட் ஏர் மற்றும் ஐபோன் SE: எப்போது அறிமுகம்?
மார்ச் 8 ஆப்பிள் நிகழ்வில் ஐபாட் ஏர் மற்றும் ஐபோன் SE: எப்போது அறிமுகம்?

வரும் மார்ச் 8-ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெற உள்ள நிகழ்வு ஒன்றை நடத்துவதாக தெரிவித்துள்ளது தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள். ஐபாட் ஏர் மற்றும் ஐபோன் SE 2022 மாடல் போன் ஆகியவை இந்த நிகழ்வில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

SE 2022 மாடல் 5ஜி போனாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 அமெரிக்க டாலர்களுக்கு இந்த போன் விற்பனை செய்யப்படலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் எம் சீரிஸ் சிப்களை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபோன் SE கடந்த 2016-இல் அறிமுகம் செய்யப்பட்டது. 2020-இல் ஐபோன் SE 2 மாடல் அறிமுகமாகி இருந்தது. தற்போது ஐபோன் SE 2022 மாடல் வெளியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com