களவு போனதாக புகார் கொடுக்கப்பட்ட ஐபோன்கள் இனி பழுது நீக்கப்படாது - ஆப்பிள்

களவு போனதாக புகார் கொடுக்கப்பட்ட ஐபோன்கள் இனி பழுது நீக்கப்படாது - ஆப்பிள்

களவு போனதாக புகார் கொடுக்கப்பட்ட ஐபோன்கள் இனி பழுது நீக்கப்படாது - ஆப்பிள்

இப்போது வரை ஐபோன்களில் ‘Find My’ அம்சம் ‘ஆன்’ செய்யப்பட்ட போன்களை பழுது நீக்கவும், மாற்றிக் கொடுக்கும் பணியையும் ஆப்பிள் நிறுவனம் செய்வதில்லை. ஆனால் இப்போது முதல் களவு போனதாக புகார் கொடுக்கப்பட்ட ஐபோன்கள் இனி பழுது நீக்கப்படாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் ‘Find My’ அம்சம் ‘ஆன்’ செய்யப்படாத போன்களிலும் களவு போனதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தால் அதை பழுது நீக்க முடியாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் உள்ளவர்களும் பழுது நீக்க வரும் ஐபோன்களை களவு போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்ட பின்னர் பெறுமாறு தெரிவித்துள்ளதாக தகவல். 

தங்களிடம் உள்ள டேட்டாபேஸ் மூலம் GSMA மற்றும் IMEI நம்பர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என ஆப்பிள் ஊழியர்கள் தங்களிடம் வரும் போன்கள் களவு போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது. 

ஆப்பிள் போன்களை தவறவிட்டவர்கள் ஐ-கிளவுட் மூலம் தங்கள் கணக்கில் லாக்-இன் செய்து ‘Find My iPhone’ ஆப்ஷனை க்ளிக் செய்தால் அந்த போன் எங்குள்ளது என்ற விவரதத்தை அறிந்து கொள்ளலாம். அதே போல ஒலி எழுப்ப, லாஸ்ட் மோடு மற்றும் Erase Device ஆப்ஷனை தேர்வு செய்யலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com