\
ஆப்பிள் ஐபோன் 16
ஆப்பிள் ஐபோன் 16 புதிய தலைமுறை

அதிரடியாக இந்தியாவில் தொடங்கியது ஆப்பிள் ஐபோன் 16 விற்பனை!

ஆப்பிள் ஐபோன் 16 - ஐ வாங்குவதற்காக, மும்பையிலுள்ள ஆப்பிள் ஸ்டோரில் 20 மணி நேரத்திற்கு மேலாக வாடிக்கையாளர்கள் காத்திருந்த நிலையில், அதன் விற்பனை தொடங்கியுள்ளது
Published on

ஆப்பிள் ஐபோன் 16 - ஐ வாங்குவதற்காக, மும்பையிலுள்ள ஆப்பிள் ஸ்டோரில் 20 மணி நேரத்திற்கு மேலாக வாடிக்கையாளர்கள் காத்திருந்த நிலையில், அதன் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

ஆப்பிள் இன்டெலிஜென்ஸ், ஐ.ஓ.எஸ் 18 போன்ற அதிநவீன தொழில் நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஐபோன் 16 சீரிஸ், இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது. இந்தநிலையில் அதனை வாங்குவதற்காக, மும்பையின் பாந்த்ரா - குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியிலுள்ள ஆப்பிள் ஸ்டோரில், நேற்று முதலே வாடிக்கையாளர்கள் குவிந்து வந்தனர். 20 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் காத்திருந்த நிலையில், இன்று காலையில் விற்பனை தொடங்கியது.

ஆப்பிள் ஐபோன் 16
Instagram பயனர்களுக்கு அதிர்ச்சி.. முகத்தோற்றத்தை அழகாக காட்டும் Beauty Filters-ஐ நீக்கும் மெட்டா!

ஆப்பிள் ஸ்டோரின் ஊழியர்கள் கரவொலி எழுப்பி, ஆப்பிள் ஸ்டோருக்குள் வாடிக்கையாளர்களை வரவேற்று விற்பனையை தொடங்கினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com