\
சிம் கார்டே இல்லாமல் இ-சிம் வசதியுடன் ஐஃபோன் 14

சிம் கார்டே இல்லாமல் இ-சிம் வசதியுடன் ஐஃபோன் 14

சிம் கார்டே இல்லாமல் இ-சிம் வசதியுடன் ஐஃபோன் 14
Published on

புத்தாண்டில் அறிமுகமாகப் போகும் ஆப்பிள் ஐஃபோன் 14ல் சிறிய அட்டையில் வரும் சிம் கார்டுக்கு மாற்றாக உருவமற்ற மின்னணு சிம்கார்டு இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு அறிமுகமான ஐஃபோன் எக்ஸ் எஸ் மாடலில் இருந்தே இ-சிம் என்ற தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அளித்து வருகிறது. எனினும், அவற்றில் இ-சிம் தேர்வு செய்யப்பட்டாலும் நானோ சிம் கார்டுக்கான இடமும் இருக்கும். ஆனால், ஐஃபோன் 14ல் சிம் கார்டு ஸ்லாட்டே இல்லாமல் இ-சிம் தொழில்நுட்பம் மட்டுமே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com