\
ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 13 சீரிஸ் போன்கள் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 13 சீரிஸ் போன்கள் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 13 சீரிஸ் போன்கள் அறிமுகம்
Published on

செல்போன் ஆர்வலர்கள், ஆவலுடன் எதிர்பார்த்த ஐபோன்13 வகை சீரிஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை iPhoneகளில் 12 சீரிஸ்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், 13-வது சீரியஸ் வகை போன்கள் இணையவழியில் அறிமுகப்படுத்தப்பட்டன. iPhone-13, iPhone-13 mini, iPhone-13 Pro, iPhone-13 Pro Max ஆகிய 4 வகை மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவைகளின் இந்திய விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வகையான Storageக்களில் கிடைக்கும் iPhone-13 மினியின் குறைந்தபட்ச விலை 69 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும்.

iPhone-13 Pro Max-ன் அதிகபட்ச விலை  ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும். 5 ஜி தொழில் நுட்பவசதியுடன் 4 விதமான போன்களும் ஒரே அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஐபோன்கள் தவிர, iPad, iPad Mini, ஆப்பிள் வாட்ச் 7-வது சீரிஸும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com