சார்ஜ் நிற்பதில்லை.. பேட்டரியில் சொதப்பும் ஐபோன் 12சீரிஸ்: புலம்பும் பயனாளர்கள்!

சார்ஜ் நிற்பதில்லை.. பேட்டரியில் சொதப்பும் ஐபோன் 12சீரிஸ்: புலம்பும் பயனாளர்கள்!

சார்ஜ் நிற்பதில்லை.. பேட்டரியில் சொதப்பும் ஐபோன் 12சீரிஸ்: புலம்பும் பயனாளர்கள்!
Published on

ஐ போன் 12 சீரிஸ் வகை போன்களின் பேட்டரி சார்ஜ் வேகமாக காலியாவதாக பயனாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஐ போன் 12 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்தைக்கு விற்பனைக்கு வந்தன. அதில் ஐ போன் 12 மினி, ஐ போன் 12, ஐ போன் 12 ப்ரோ, ஐ போன் 12 ப்ரோ மேக்ஸ் ரக ஸ்மார்ட் போன்கள் இடம் பெற்றன. பொதுவாக ஐ போனின் நம்பகத்தன்மை மக்களிடம் நன்மதிப்பை பெற்ற நிலையில், இந்த சீரிஸ் ஸ்மார்போன்கள் ஆரம்பம் முதலே வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து புகார்களை சந்தித்து வந்தது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் இந்த சீரிஸ் போன்களின் மீது புகார் எழுந்துள்ளது. அது என்னவென்றால் ஐ போன் 12 சீரிஸ் வகை போன்களின் பேட்டரி சார்ஜ் வேகமாக காலியாவதாக பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வாடிக்கையாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னவென்றால், ஸ்மார்ட் போனை பயன்படுத்திய சிறிது நேரத்திலேயே பேட்டரில் உள்ள சார்ஜ் இறங்கி விடுகிறது. போனில் இருக்கும் லோயர் பவர் மோடை பயன்படுத்தி போனை பயன்படுத்தலாம் என்றால், பேட்டரியின் பயன்பாடு இன்னும் மோசமாக இருக்கிறதாக சொல்லப்படுகிறது.

இந்த ரக ஸ்மார்ட்போன்களை வாங்கிய 1000 வாடிக்கையாளர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் ஆஃப் செய்யப்பட்டு, வேறு எந்த செயல்பாடுகள் செய்யாமல் இருந்தாலும் கூட, ஒரே இரவில் பேட்டரியின் சார்ஜ் 20 முதல் 40 சதவீத இறங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பயனாளர்களின் இந்த புலம்பல் குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை வாய்திறக்கவில்லை. அதேவேளையில் இது iOSன் ஒரு குறைபாடாக இருக்கலாம் என்றும்,  iOS 14 அப்டேட்டின் போது இந்த குறைபாடு சரிசெய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com