காற்று மாசுபாட்டைக் குறைக்கும் ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் 2018ல் அறிமுகம்

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் 2018ல் அறிமுகம்

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் 2018ல் அறிமுகம்
Published on

காற்று மாசுபடுதல் மற்றும் பெட்ரோலிய தேவையைக் குறைக்கும் வகையில் புதிய ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் 2018ல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன. 

தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. அந்த வளர்ச்சிக்கு ஏற்ப சுற்றுச்சூழல் மாசுபடுதலும் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை குறைக்கும் வகையிலும், சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் வகையிலும் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் முதலாவதாக களத்தில் இறங்க இருக்கின்றன ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள். ஹீரோ நிறுவனம் ஹீரோ டூயட் ஸ்கூட்டர் எனும் மின்சாரம் மூலம் மட்டுமே இயங்கும் ஸ்கூட்டரை முதன் முதலாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆட்டோ எக்ஸ்போ மாடல் 6.7 hp மற்றும் 14 Nm torque ஆகியவற்றை உருவாக்கும் மின் மோட்டார் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

ஹீரோ டூயட் ஸ்கூட்டர் 2018ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் இடம்பெறும் மின்மோட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 65 கிமீ வரை செல்லும். இதனை போன்று ஹோண்டா PCX எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஹீரோ லீப், மஹிந்திரா ஜன்ஜீ, டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்று வரிசையாகக் களம் இறங்க உள்ளன. பெட்ரோல் இன்றி பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஸ்கூட்டர்கள் புழக்கத்துக்கு வந்தால் சுற்றுசூழல்மாசு அதிகளவில் குறைய வாய்ப்புள்ளதாக ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com