\
காற்று சுத்திகரிப்பான் கொண்ட புதிய முகக்கவசம் அறிமுகம்

காற்று சுத்திகரிப்பான் கொண்ட புதிய முகக்கவசம் அறிமுகம்

காற்று சுத்திகரிப்பான் கொண்ட புதிய முகக்கவசம் அறிமுகம்
Published on

காற்றை சுத்திகரிக்கும் வகையிலான முகக்கவசத்தை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வை‌ரஸ்‌ தொற்றால் முகக்கவசங்கள் நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பாதுகாப்பு கவசமாகிவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், AIR PURIFIER முகக்கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த முகக்கவசத்தில் இரண்டு காற்று சுத்திகரிப்பான்கள் உள்ளன. இவை காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்புகிறது.

முகக்கவசத்தை அணிபவர்களின் சுவாச சுழற்சிக்கு ஏற்ப அளவைமாற்றி கொள்ள சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்படாத வண்ணமும் கண்ணாடி அணிவோருக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலை நிர்ணயம் செய்யவில்லை என கூறியுள்ள எல்ஜி நிறுவனம், விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com