நான்கு கேமரா, 5020 மில்லியாம்ப் பேட்டரி திறனுடன் அசத்தும் ரெட்மி நோட் 9 அறிமுகம்

நான்கு கேமரா, 5020 மில்லியாம்ப் பேட்டரி திறனுடன் அசத்தும் ரெட்மி நோட் 9 அறிமுகம்
நான்கு கேமரா, 5020 மில்லியாம்ப் பேட்டரி திறனுடன் அசத்தும் ரெட்மி நோட் 9 அறிமுகம்

நான்கு கேமரா, 5020 மில்லியாம்ப் பேட்டரி திறனுடன் அசத்தும் ரெட்மி நோட் 9

ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் 'ரெட்மி நோட் சீரிஸ்' ரக போன்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அதனால் தான் நோட் 3யில் ஆரம்பித்து நோட் 9 வரை தொடர்ச்சியாக சந்தையில் நோட் சீரிஸ் ரக போன்களை லான்ச் செய்து வருகிறது ஜியோமி நிறுவனம். வரும் ஜூலை 24ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ள நோட் 9 போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் இடம் பெற்றுள்ளது. நான்கு கேமராக்கள் இந்த போனின் ரியர் சைடில் பொருத்தப்பட்டுள்ளன. 5020 மில்லியாம்ப் திறன் கொண்ட பேட்டரி இந்த போனில் உள்ளது. 

பட்ஜட் ரக விலையில் அறிமுகமாகியுள்ள இந்த போன் மூன்று விலைகளில் விற்பனையாக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன் 11,999 ரூபாய்க்கும்,  4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன் 13,499 ரூபாய்க்கும்,  6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன் 14,999 ரூபாய்க்கும் விற்பனையாக உள்ளது. அமேசான் மற்றும் ரெட்மி ஸ்டோர்களில் ஆன்லைன் மூலமாக மட்டுமே இந்த போனை ஆர்டர் செய்து வாங்க முடியும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com