ஒரே நேரத்தில் நேரலையில் 4 பேர்: 'லைவ் ரூம்ஸ்' ஆப்ஷனை கொண்டு வந்த இன்ஸ்டா!

ஒரே நேரத்தில் நேரலையில் 4 பேர்: 'லைவ் ரூம்ஸ்' ஆப்ஷனை கொண்டு வந்த இன்ஸ்டா!
ஒரே நேரத்தில் நேரலையில் 4 பேர்: 'லைவ் ரூம்ஸ்' ஆப்ஷனை கொண்டு வந்த இன்ஸ்டா!

நான்கு பேர் ஒரே நேரத்தில் நேரலையில் உரையாடும் லைவ் ரூம்ஸ் ஆப்ஷனை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றுமொரு சமூக வலைதளம் இன்ஸ்டாகிராம். புகைப்படங்கள், வீடியோ என ஆப்ஷன்களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் பலர் உண்டு. ஃபேஸ்புக் பயன்படுத்தாத பிரபலங்கள் கூட இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பார்கள். இப்படி இன்ஸ்டாகிராமிற்கென தனி ரசிகர்கள் உண்டு. அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது அப்டேட்களை கொடுத்து வருகிறது இன்ஸ்டா. இந்நிலையில் தற்போது லைவ் ரூம் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது.

இதுவரை இருவர் மட்டுமே ஒரே நேரத்தில் நேரலையில் இணைந்திருக்க முடியும். தற்போது 4 பேர் வரை ஒரே நேரத்தில் நேரலையில் இணைந்திருக்கும் வகையில் அப்டேட் கொண்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள இன்ஸ்டா, நான்கு பேர் வரையில் நேரலையில் ஒரே நேரத்தில் இணைந்திருக்க முடியும் என்பது சிறப்பான ஒன்று தான். இதன் மூலம் கேள்வி பதில்கள் நடத்தலாம், நண்பர்களுடன் உரையாடலாம், இசை தொடர்பாக நிகழ்ச்சிகளை நடத்தலாம் என தெரிவித்துள்ளது.

லைவ் ரூம்ஸ் அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக இன்ஸ்டாகிராம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்த அப்டேட் நடைமுறைக்கு வந்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com