infosyspt
டெக்
20,000 பேருக்கு வேலை.. Infosys வெளியிட்ட குட் நியூஸ்!
நடப்பாண்டில் 20,000 பேரை பணிக்கு அமர்த்த உள்ளதாக இன்ஃபோசிஸ்
அறிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், நடப்பாண்டில் 20 ஆயிரம் பேரை பணிக்கு அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
20,000 பேருக்கு வேலை..
சமீபகாலமாகவே இந்நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக சர்ச்சை எழுந்து வருகிறது. தற்போதுகூட 240க்கும் மேற்பட்ட பயிற்சிநிலை ஊழியர்கள், நிறுவனத்தில் உள்ள மதிப்பாய்வு தேர்வில் தேர்ச்சிபெறவில்லை எனக் கூறி பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
அதேநேரம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகத்தில் நிச்சயமற்றதன்மை நிலவும் நிலையிலும், 20 ஆயிரம் பேரை பணிக்கு எடுக்க இருப்பதாக கூறியுள்ளது.
இந்நிறுவனம், கடந்த ஆண்டில் 15 ஆயிரம் பேரை பணிக்கு அமர்த்தியிருந்தது கவனிக்கதக்கது.