இன்ஃபினிக்ஸ் ‘நோட் 5 ஸ்டைலஸ்’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ‘நோட் 5 ஸ்டைலஸ்’ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.
டெல்லி இன்று வெளியிடப்பட்ட ‘நோட் 5 ஸ்டைலஸ்’ ஸ்மார்ட்போனில் வோல்ட் ஆஃப்ஷனுடன் இரட்டை நானோ சிம் பொருத்தலாம். ஆண்டராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன் 5.93 இன்ஞ் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டது. இது 85 சதவிகிதம் என்.டி.எஸ்.சி ‘கலர் கோமட்’டை ஏற்றுக்கொள்ளும். ஸ்டோரேஜை பொருத்தவரை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக மைக்ரோ சிப் பொருத்தி மெமரியை அதிகரித்துக்கொள்ளலாம்.
பின்புறத்தில் இரண்டு ஃப்லாஷ் லைட்டுடன் கூடிய 13 எம்.பி (மெகா பிக்ஸல்) கேமராவும், முன்புறத்திலும் ஃப்லாஷ் லைட் வசதி கொண்ட 16 எம்பி செல்ஃபி கேமராவும் ‘நோட் 5 ஸ்டைலஸில்’ உள்ளது. பின்புறத்தில் கேமராவிற்கு கீழே போனை அன்லாக் செய்யும் கைரேகை பதிவு ஆஃப்ஷன் உள்ளது.
போனின் செயல்பாடு நீண்ட நேரம் நீடித்தும் நிற்க வேண்டும் என்பதற்காக 4,000 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மார்கெட்டான ஃப்லிப்கார்டில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.