வாட்ஸ்அப் மூலம் புத்தாண்டு செய்தி அனுப்பியதில் இந்தியர்கள் சாதனை!

வாட்ஸ்அப் மூலம் புத்தாண்டு செய்தி அனுப்பியதில் இந்தியர்கள் சாதனை!
வாட்ஸ்அப் மூலம் புத்தாண்டு செய்தி அனுப்பியதில் இந்தியர்கள் சாதனை!

உலகம் முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களால் பயன்படுத்தபடும் வாட்ஸ்அப் செயலியில் புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்புவதில் இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நாடு முழுவதும் 2018 ஆம் ஆண்டை வரவேற்கும் புத்தாண்டு நிகழ்ச்சி களைகட்டியது. ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தில் நண்பர்கள், உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை மெசஜ், ஈமெயில், கால் செய்து பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியின் வருகைக்கு பின்னர், புத்தாண்டு வாழ்த்துகளில் வாட்ஸ்அப் சேவையும் முக்கியமான இடத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகளை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டதில் இந்தியர்கள் சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சரியாக டிசம்பர் 31, 2017 இரவு 11:59 மணியில் இருந்து புதிய ஆண்டு பிறக்கும் 12 மணி வரை உள்ள இடைவெளியில் இந்தியாவில் மட்டும் சுமார் 20 பில்லியன் மக்கள் தங்களின் உறவினர்கள் மட்டும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த 20 பில்லியன் மக்கள் பயன்பாட்டினால் வாட்ஸ்அப் செயலி மிகப்பெரிய மைல்கல்லை அடைந்திருப்பதாகவும் அந்நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதனுடன் வாட்ஸ்அப்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய அப்டேட்களுக்கு பின்பு நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு நள்ளிரவில் வாட்ஸ்அப்பில் அதிகளவு பயன்பாட்டினால் பல நாடுகளில் சில மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com