’சரஸ்வதி’… இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த நட்சத்திரக் கூட்டம்

’சரஸ்வதி’… இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த நட்சத்திரக் கூட்டம்

’சரஸ்வதி’… இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த நட்சத்திரக் கூட்டம்
Published on

பிரபஞ்சத்தில் கண்டறிந்த புதிய நட்சத்திரக் கூட்டத்துக்கு சரஸ்வதி என இந்திய விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். 

மகராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியிலிருந்து 400 ஒளிஆண்டுகள் தொலைவில் அந்த நட்சத்திரக் கூட்டம் அமைந்துள்ளது எனக் கூறியுள்ளனர். இதுவரை கண்டறியப்பட்டுள்ள விண்மீன் கூட்டங்களிலேயே மிகப்பெரியதாக அறியப்படும் சரஸ்வதி நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து புறப்பட்ட ஒளியைக் கண்டறிந்துள்ளதாகவும், கடந்த காலத்தில் அந்த ஒளி எப்படி இருந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 
மிகவும் நெருக்கமாகக் காணப்படும் விண்மீண் கூட்டம் கண்டறியப்படுவது இதுவே முதல்முறை என்று கூறியுள்ள ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி சிஷிர் சங்க்யாயன், இந்திய விஞ்ஞானிகள் விண்மீன் கூட்டம் ஒன்றைக் கண்டறிவதும் இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தார். அந்த நட்சத்திரக் கூட்டத்தின் ஒளியானது பூமியை அடைய நீண்டகாலம் எடுத்துக் கொண்டிருக்கும். அதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும், பிரபஞ்ச இயக்கத்துக்கான ஆற்றலைக் கொடுக்கும் டார்க் எனர்ஜி குறித்தும் ஆய்வு செய்வதில் சரஸ்வதி விண்மீன் கூட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். பூமியானது பால்வெளிவீதி எனும் நட்சத்திரக் கூட்டத்தின் அங்கமாகும். இந்த பால்வெளிவீதியானது லானியாகா (Laniaka supercluster) எனும் சூப்பர்க்ளஸ்டரில் இருப்பதாகவும் சங்க்யாயன் கூறியுள்ளார். அதேபோன்றதொரு சூப்பர் க்ளஸ்டர் எனும் மாபெரும் நட்சத்திரக் கூட்டமே இந்த சரஸ்வதி நட்சத்திரக் கூட்டம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.    
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com