ஆப்பிள்: சீன உற்பத்தியை குறைத்து இந்தியாவுக்கு முன்னுரிமை!
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்களில் 77 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 54 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு இதுவரை இந்தியாவில் இருந்து செய்யப்பட்ட மொத்த ஐபோன் ஏற்றுமதியில் 52 சதவீதத்துடன் ஃபாக்ஸ்கான் முன்னணியில் இருந்தாலும், ஆப்பிளின் இந்திய உற்பத்தியில் டாடா ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
டாடாவின் ஐபோன் உற்பத்தி கடந்த ஆண்டு 13 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. டாடா நிறுவனம் கடந்த 5 மாதங்களில் 75 லட்சத்துக்கும் அதிகமான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது.
நிறுவனங்கள் கொள்கையை மாற்றாது..
சீன உற்பத்தியை குறைத்து இந்தியா, வியட்நாமுக்கு மாற்றம் கொண்டுவரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவை வளர்ச்சி மையமாக மாற்றிவருவது புள்ளிவிவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்திக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்த போதிலும், நிறுவனங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாது எனக் கூறுகிறார் தொழில் துறை வல்லுநர் கணபதி.
ஆப்பிள் ஐபோன்களுக்கான நுகர்வோர்கள் உலகளவில் அதிகமாகிக் கொண்டிருப்பது இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என்பது உண்மை.