மருத்துவக் கழிவுகளை நிர்வகிக்க புதிய முறைகள்: ஜெர்மன்-சென்னை ஐஐடி கூட்டு கண்டுபிடிப்பு

மருத்துவக் கழிவுகளை நிர்வகிக்க புதிய முறைகள்: ஜெர்மன்-சென்னை ஐஐடி கூட்டு கண்டுபிடிப்பு
மருத்துவக் கழிவுகளை நிர்வகிக்க புதிய  முறைகள்:  ஜெர்மன்-சென்னை ஐஐடி கூட்டு கண்டுபிடிப்பு
Published on

உலகம் முழுவதும் வேதிப்பொருள்கள் தொடங்கி தனிப்பட்ட பராமரிப்புக்கான தயாரிப்புகள், மருத்துவக் கழிவுகளை மேலாண்மை செய்வது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால் சுற்றுச்சூழலுக்கும் மனித இனத்திற்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாக அழிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளனர்.

இணை உரம் தயாரிக்கும் முறையை உருவாக்கி, உலர்ந்த கழிவுநீர்க் கழிவுகள் மற்றும் ஆர்கானிக் கழிவுகளுடன் மிகக் குறைந்த செறிவுள்ள இரசாயனக் கலவையை கலந்து, மருத்துவக்கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் வழிகளை மேம்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக பலகட்ட ஆய்வுகளை நடத்தி புதிய வழிகளை அடையாளம் கண்டுள்ளனர். சென்னை ஐஐடி கட்டடக்கலை பொறியியல் பேராசிரியர் லிஜி பிலிப், அனு ரேச்சல் தாமஸ், ஜெர்மனியைச் சேர்ந்த சுகாதாரப் பொறியியல் பேராசிரியர் மார்டின் கிரானர்ட் ஆகியோர் மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கான பாதுகாப்பான அறிவியல் நடைமுறைகளை அறிவித்துள்ளனர்.

"மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் கழிவுநீர்த் தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. சரியான மேலாண்மை முறைகளில் பின்பற்றப்படாமல், அவை சுற்றுச்சூழலுக்கு எதிராக மாறுகின்றன" என்கிறார் பேராசிரியர் பிலிப்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com