திடீரென வெடிக்கும் ஸ்மார்ட்போன்கள்... தவிர்ப்பது எப்படி..?

திடீரென வெடிக்கும் ஸ்மார்ட்போன்கள்... தவிர்ப்பது எப்படி..?

திடீரென வெடிக்கும் ஸ்மார்ட்போன்கள்... தவிர்ப்பது எப்படி..?
Published on

அனைவரின் கையிலும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட செல்போன்கள் அடிக்கடி வெடிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. எனவே செல்போன் வெடிப்பதை தடுப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக இருந்த மொபைல் போன்கள் இன்று மனிதனின் அத்தியாவசியமாக மாறிவிட்டது. இதனிடையே கையில் வைத்திருந்த ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறியதாக வரும் செய்திகளை பார்க்கும்போது, மனதில் பயம் தொற்றிக் கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. குறைந்த விலையில் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் தரமற்ற சீன வகை செல்ஃபோன்கள் வெடிக்கும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர்‌ வியாபாரிகள். இதனால் சீன வகை தயாரிப்புகளை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டத‌கவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தரமற்ற தயாரிப்புகளால் ஏற்படும் பாதிப்பு ஒருபு‌றமிருக்க, முறையாக பயன்படுத்தப்படாவிடில் உயர்தர செல்போன்க‌ளும் வெடித்துச் சிதற வாய்ப்பிருப்பதாக கூறு‌கின்றனர் நிபுணர்கள். செல்போனின் பேட்டரிகளை பராமரித்து, சார்ஜ் செய்வதற்கு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிப்பதன் மூலம் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

* பேட்டரிகள் வெப்பமடைவதே செல்போன் வெடிப்பதற்கு முதன்மையான காரணமாக சொல்லப்படுகிறது.

* உயர் அல்லது குறைந்த மின்சாரத்தில் செல்போன்களை சார்ஜ் செய்யக்கூடாது.

* அதிக அப்ளிகேஷன்களை பயன்படுத்தினால் பேட்டரி வெப்பம் அடைய வாய்ப்பு உண்டு. இதனால் கூட செல்போன்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.

* தொடர்ந்து இன்டர்நெட் பயன்படுத்தினால் பேட்டரி‌யில் பாதிப்பு ஏற்படும்.

* சீன வகை ஸ்மார்ட்போன்‌களில் உள்ள தரமற்ற பேட்டரிகள் வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளதால், முன்ன‌ணி நிறுவனங்களின் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

தொழ்நுட்ப வளர்ச்சி தந்த செல்போன்களால் நன்மைகள் இருந்தாலும், அதே அளவில் தீமைகளும், பாதிப்புகளும் இருக்கிறது என்பதே நிதர்சனம். நாம் பயன்படுத்தும் சாதனங்களின் தன்மையை அறிந்து‌, அதனை முறையாக பராமரிப்பதன் மூலம் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com