செகண்ட்  ஹேண்ட் லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?

செகண்ட்  ஹேண்ட் லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?

செகண்ட்  ஹேண்ட் லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
Published on

கொரோனா அச்சுறுத்தலினால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனுக்கு மாறியுள்ளன. பாடம் எடுப்பது, தேர்வு எழுதுவது என அனைத்தும் இந்தியாவில் தற்போது இணையமயமாகி உள்ளது. 

ஆன்லைன் மூலம் கல்வி கற்க மாணவர்களுக்கு அவசியம் தேவைப்படுவது லேப்டாப், மொபைல் மாதிரியான டிஜிட்டல் கேட்ஸ்கள். ஒரு சிலர் லேப்டாப்பை மட்டுமே ஆன்லைன் மூலம் கல்வி பயில்வதற்கான பர்ஸ்ட் சாய்ஸாக பார்க்கிறார்கள். 

அதே நேரத்தில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலையும் கருத்தில் கொண்டு புதிய லேப்டாப்பிற்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் லேப்டாப்களை வாங்கவும் சிலர் முடிவு செய்திருக்கலாம். சமயங்களில் அது சங்கடங்களையும் கொடுக்கலாம். 

அதை தவிர்க்க பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் லேப்டாப்பை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன?

*லேப்டாப் வாங்குவதற்கு முன் ரேம், ஸ்டோரேஜ் ஸ்பேஸ், பிராஸசர் என அவரவர் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும். 

ஆன்லைன் கல்வி கற்க விரும்புவர்களுக்கு 4ஜிபி ரேம் மற்றும் 500 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட லேப்டாப் போதுமானது. 

*ஒரே ஆன்லைன் பிளேட்பார்மில் தேடாமல் பலவிதமான ஆன்லைன் ஸ்டோர் பிளாட்பார்ம்களில் நமக்கு தேவையான லேப்டாப் மாடலின் விலையை ஒப்பிட்டு பார்க்கலாம். அதே நேரத்தில் புதிதாக சந்தையில் கிடைக்கும் அந்த மாடலின் விலை குறித்தும் ஆராய்ந்த பிறகு வாங்கலாம். 

*லேப்டாப்பின் ஸ்க்ரீன் சைஸ் உள்ளிட்டவற்றை முடிவு செய்து கொள்ள வேண்டும். 13 இன்ச் சைஸில் ஆரம்பித்து 17 இன்ச் வரை லேப்டாப்கள் கிடைக்கின்றன. 

*அதே போல லேப்டாப்பின் ஆபரேட்டிங் சிஸ்டம் விஷயத்திலும் கவனம் கொள்ள  வேண்டும். மேக் ஆபரேட்டிங் சிஸ்டத்தை காட்டிலும் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் செகண்ட் ஹேண்ட் லேப்டாப் வாங்க உகந்தது என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

*பயன்படுத்தப்பட்ட லேப்டாப்களை  வாங்கும் போது வெப் கேம், ஸ்பீக்கர், கீபோர்டு பட்டன், வைஃபை, டிஸ்ப்ளே, பேட்டரி, சார்ஜிங் வொயர் மாதிரியானவை முறையாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டுமே. அதே போல லேப்டாப்பில் ஏதேனும் பகுதி உடைந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். 

*அதே போல வாங்குவதற்கு முன் லேப்டாப்பின் மாடல் நம்பர் மற்றும் உற்பத்தி செயயப்பட்ட ஆண்டினையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

*இதையெல்லாம் செய்த பிறகு ஆன்லைன் மூலம் லேப்டாப்பை விற்க விரும்பும் நபரை நேரில் சந்தித்து வாங்கி கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com