எப்படி இருக்கு சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி? விரிவான அலசல்!

எப்படி இருக்கு சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி? விரிவான அலசல்!
எப்படி இருக்கு சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி? விரிவான அலசல்!

சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ரூ.28,499 ஆரம்ப விலையில் இந்த மொபைல் வெளியாகி உள்ளது. இது ரூ.30,000 விலை பிரிவில் சமீபத்திய நுழைவு மற்றும் OnePlus Nord 2 மற்றும் Xiaomi 11i ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் வகையில் வெளியாகியுள்ளது.

ஏன் வாங்கலாம்? முக்கிய காரணங்கள்!

1. சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஆனது AMOLED Full HD+ பேனலைக் கொண்டுள்ளத. எனவே பிரகாசமான மற்றும் தெளிவான திரையைப் பெற இயலும். மென்மையான ஸ்க்ரோலிங் அனுபவத்திற்காக பேனல் 90Hz புதுப்பிப்பு வீதத்தை பெற்றுள்ளது. மேலும் 6.4-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது போதுமான அளவு பெரியது மற்றும் நல்ல உள்ளடக்கத்தை, பார்க்கும் அனுபவத்தை வழங்கும்.

2. நீண்ட கால மென்பொருள் ஆதரவு! மூன்று வருட ஆண்ட்ராய்டு OS புதுப்பிப்பு மற்றும் நான்கு வருட பாதுகாப்பு புதுப்பிப்பைப் பெற்றுள்ளது இந்த மொபைல். ஃபோனை அடிக்கடி மாற்றாதவர்களுக்கும், குறைந்தது 3 வருடமாவது பயன்படுத்துபவர்களுக்கும் இது முக்கியம். ரூ.30,000க்கு கீழ் உள்ள மற்ற ஃபோன்கள் பெரும்பாலும் 2 வருட ஆண்ட்ராய்டு மற்றும் 3 வருட வழக்கமான அப்டேட்களை மட்டுமே வழங்குகின்றன. ஆனால் சாம்சங் அதை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது.

3. இது IP67 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் ரூ.30,000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன்களில் நீங்கள் காணாத மற்றொரு அம்சமாகும். இதன் பொருள் தூசி மற்றும் நீர்ப்புகா பாதுகாப்பை பெற்ற சாதனம் என்று பொருள். எனவே, மழைக்காலத்தில் உங்கள் ஃபோன் சேதமடைவதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. IP67 மதிப்பீட்டின்படி, இந்த Samsung ஃபோன் சுமார் 1 மீட்டர் தண்ணீரில் 30 நிமிடங்கள் வரை பாதிப்பில்லாமல் இருக்குமாம்.

4.5000 mAh பேட்டரி! இது பயனர்களுக்கு வழக்கமான பயன்பாட்டுடன் ஒரு நாள் பேட்டரி ஆயுளைக் கொடுக்கும். பயனர்கள் இதே பேட்டரி யூனிட்டை வேறு சில போன்களிலும், இதே விலை வரம்பில் காணலாம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

5. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்! பெரும்பாலான ஃபோன்களில் கிடைக்கும் ஸ்பீக்கர்களை இதிலும் சாம்சங் வழங்கியுள்ளது. கூடுதலாக, ஸ்பீக்கர்கள் சிறந்த ஒலி அனுபவத்திற்காக டால்பி அட்மோஸிற்கான ஆதரவைக் கொண்டுள்ளன.

கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள்!

1. ஃபாஸ்ட் சார்ஜிங் இல்லையாம்! சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி மெதுவாக சார்ஜ் செய்வதற்கான ஆதரவையேக் கொண்டுள்ளது. இது சில பயனர்களை ஏமாற்றலாம். OnePlus, Realme மற்றும் Xiaomi போன்ற பிராண்டுகள் இதே விலைக்கு மிக வேகமாக சார்ஜ் செய்யும் வேகத்திற்கான ஆதரவை வழங்குகிறது. சாம்சங், மறுபுறம், 25W க்கு மட்டுமே ஆதரவை வழங்கியுள்ளது.

2. சார்ஜர் தனியாகத் தான் வாங்கணுமாம்! சாம்சங் இந்த மொபைல் சார்ஜரை பெட்டியில் இணைக்கவில்லை. எனவே, ஒருவர் சார்ஜருக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். உங்களிடம் கூடுதல் அல்லது பழைய சார்ஜர் இருந்தால், இது உங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், உங்கள் பழைய மொபைலை புதியதாக மாற்ற (Exchange) நீங்கள் திட்டமிட்டால், சார்ஜர் மற்றும் பெட்டிக்குள் வரும் மற்ற அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com