இந்தியாவில் பொங்கலுக்கு வரும் ஹானர் ‘10 லைட்’ : விலை, சிறப்பம்சங்கள்
ஹவாய் நிறுவனத்தின் துணைத் தயாரிப்பு நிறுவனமான ஹானர் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான ஹானர் 10 லைட் பொங்கலையொட்டி வெளியிடவுள்ளது.
ஹானர் ‘10 லைட்’ ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் பொங்கலையொட்டி இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று ரகங்களில் வெளியாகவுள்ள இந்த போனில், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.14,400 ஆகும்.
6 ஜிபி ரேம் / 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.17,500 ஆகும். 6 ஜிபி ரேம் / 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.19,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீலம், சிவப்பு, வெள்ளை, கறுப்பு ஆகிய நிறங்களில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் :
ரேம் : 4 ஜிபி / 6 ஜிபி
இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி / 128 ஜிபி
மைக்ரோ சிப் : கூடுதலாக 512 ஜிபி
ஆண்ட்ராய்டு : 9.0 பெயி
டிஸ்ப்ளே : 6.21 இன்ச் ஃபுல் ஹெச்டி
சிம் : 2 சிம் (வோல்ட்)
பேட்டரி திறன் : ரூ.3,400 எம்.ஏ.எச்