காலை ஊன்ற தேவை இல்லை...தானாக பேலன்ஸ் செய்யும் பைக்

காலை ஊன்ற தேவை இல்லை...தானாக பேலன்ஸ் செய்யும் பைக்
காலை ஊன்ற தேவை இல்லை...தானாக பேலன்ஸ் செய்யும் பைக்

கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி 2017இல் ஹோண்டா நிறுவனம் தனது புதிய செல்ஃப்
பேலன்ஸிங் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சைக்கிள் ஓட்டுவதிலும் பைக் ஓட்டுவதிலும் முக்கியப் பிரச்னை சமநிலை தவறாமல் இருப்பது. சாதாரண பைக்குகளில் சாலைகளில் செல்லும் போது தடை ஏற்பட்டால் நிலை தடுமாறி விபத்துக்கள் ஏற்படுகிறது. அதை தவிர்க்கும் வகையில் ஹோண்டா நிறுவனம் செல்ஃப் பேலன்ஸிங் பைக்கை அறிமுகம்
செய்துள்ளது. இந்த வகை பைக்குகளை பயன்படுத்தும் போது ஓட்டுனர் காலை கீழே ஊன்றுவதற்கான அவசியமே இருக்காது என்றும் இந்த பைக் நமது
எடைக்கு ஏற்ற மாதிரி பேலன்ஸ் செய்து பாதுகப்பான பயணத்தை கொடுக்கும் என்றும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக ரைடர் அசிஸ்ட்
டெக்னாலாஜி மூலம் ரோபாடிக் கான்செப்டடை இனைத்து ஹோண்டா நிறுவனம் உருவாகியுள்ளது.

மேலும் பைக்கில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு நின்றுவிட்டால் பைக்கை தள்ள வேண்டாம். ஒரு சுவிட்சை ஆன் செய்வதன் மூலம் பைக்கில்
பொருத்தப்பட்டுள்ள சென்சார் இயங்க ஆரம்பித்து தானாக நம் பின்னால் வரும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட
எஞ்சின் உடைய இந்த பைக் எல்லா சாலைகளுக்கும் ஏற்ற மாதிரியான டயர்களோடு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதோடு, முதன் முதலாக பைக் சவாரி செய்ய ஆசைப்படும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் சிறப்பான பைக்காக இது இருக்கும் என்றும் ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com