\
தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில்..! 

தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில்..! 

தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில்..! 
Published on

இன்று தமிழகத்தில் உள்ள 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

ஊரடங்கினால் மக்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. இந்தியா முழுவதும் மக்களின் நடமாட்டம் 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகமே முடங்கிப் போய் உள்ள இந்தநேரத்தில், வாகனங்களிலிருந்து வெளீயேற்றப்படும் கரியமில வாயு அளவு கணிசமாக குறைந்துள்ளது. அதே போல் காற்றின் மாசும் குறைந்துள்ளது.

ஆனால் இது கோடைக் காலம் என்பதால் வெயிலின் தாக்கம் மட்டும் குறையவே இல்லை. மக்கள் அதிகம் வெளியே வராதது ஒருவகையில் நன்மையாக உள்ளது. இல்லை என்றால் இந்தக் கோடைக்காலத்தில் கொளுத்தும் வெயிலில் அவர்கள் சிக்கித் தவிக்க வேண்டி இருக்கும்.

இந்நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி அளவை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, திருச்சியில் 103.1 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. திருத்தணி மதுரை விமான நிலையம் 102.5 டிகிரி செல்சியசும் சேலத்தில் 101.6 டிகிரியும் பதிவாகியுள்ளது.

மேலும் நாமக்கல்லில் 101.3 டிகிரியை தாண்டிய வெப்பநிலை வேலூரில் 101.2 டிகிரியையும் கரூர் பரமத்தியில் 100.7 டிகிரியையும் தருமபுரியில் 100 டிகிரியையும் தொட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com