ஹீரோ எக்ஸ்ட்ரிம் 200ஆர்: சிறப்பம்சங்கள், விலை, வெளியீடு!
ஹீரோ எக்ஸ்ட்ரிம் 200ஆர் பைக் வரும் ஏப்ரல் முதல் விற்பனைக்கு வருகிறது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பைக் நிறுவனங்களில் ஹீரோவும் ஒன்று. இதற்கு முன் ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் வெளியிடப்பட்ட இதன் பைக்குகள் தற்போது, ஹீரோ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. இந்நிறுவனத்தில் பைக்குகள் என்றால் நல்ல மைலேஜ் கொடுக்கும் என்ற எண்ணம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவலாக உள்ளது என்றே கூறலாம்.
இருப்பினும் பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அபாச்சி, யமஹா எஃப்சி மற்றும் ட்யூக் உள்ளிட்ட பைக்குகள் வேகத்திலும், ஸ்டைலிலும் முக்கிய இடங்களை பிடித்துள்ளதால், இவற்றிற்கு எல்லாம் போட்டியாக ஒரு பைக்கை வெளியிட வேண்டும் என்ற வகையில், ஹீரோ தற்போது தயாரித்துள்ள பைக் தான் எக்ஸ்ட்ரிம் 200ஆர்.
இதற்கு முன்னர் எக்ஸ்ட்ரீம் 200எஸ் என்ற மாடல் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது 200ஆர் வெளியிடப்படவுள்ளது. இதன் விலை இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு ஏற்றவாறு ரூ.90,000 முதல் 1 லட்சம் வரை மாறுபடும்.
சிறப்பம்சங்கள்:
- 199.6 சிசி இன்ஜியன்
- அதிகபட்ச பவர் 18.1 பிஎச்பி
- 5 கீர்கள்
- மைலேஜ் எதிர்பார்ப்பு 40
- அதிகபட்ச வேகம் மணிக்கு 112 கி.மீ
- அலாய் வீல்கள்
- முன்பின் டிஸ்க் ப்ரேக்குகள்
- டிஜிட்டல் அனலாக்
- பெட்ரோல் டேங்க் அளவு: 12.4 லிட்டர்
- எடை: 146 கிலோ