பிரதமர் மோடியிடம் ஆப்பிள் சிஇஓ டிம் குக் கூறியது இதுதான்...

பிரதமர் மோடியிடம் ஆப்பிள் சிஇஓ டிம் குக் கூறியது இதுதான்...

பிரதமர் மோடியிடம் ஆப்பிள் சிஇஓ டிம் குக் கூறியது இதுதான்...
Published on

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடியிடம் அந்நிறுவன தலைமை செயலதிகாரி டிம்குக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூருவில் உள்ள ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பு மையத்தில் ஐபோன் எஸ்இ வகை ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் செல்போன் செயலிகளையும் உருவாக்க தயாராக இருப்பதாகவும் டிம் குக், பிரதமர் மோடியிடம் கூறியதாகத் தெரிகிறது. பெங்களூரு தயாரிப்பு மையத்தில் சிறிய எண்ணிக்கையிலான ஐபோன் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பின் முதற்கட்ட வேலைகளை ஆப்பிள் நிறுவனம் கடந்த மே மாதத்தில் தொடங்கியது. ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் செயலிகளை உருவாக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு உதவுவதற்காக ஆப் ஆக்சிலேட்டர் மையங்களை பெங்களூரூவில் ஆப்பிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் நிறுவியது. அந்த மையங்கள் மூலம் இதுவரை ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டைச் சேர்ந்த 21 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது டிம் குக்குடன், கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை, அமேசான் நிறுவனம் ஜெஃப் பேசோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com