\
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறை இதுதான்!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறை இதுதான்!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறை இதுதான்!
Published on

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “வாக்காளர்கள் '6 B' படிவத்தை பூர்த்தி செய்து, தங்கள் ஆதார் அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்” என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் https:/www.nvsp.in இணையதளம் மற்றும் Voters Helpline App மூலமும் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆதார் இல்லாத வாக்காளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்ட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com