‘ஹேக்கர்ஸ்’ புகுந்த 16 வெப்சைட்ஸ்..! - 61 கோடி கணக்குகள் திருட்டு

‘ஹேக்கர்ஸ்’ புகுந்த 16 வெப்சைட்ஸ்..! - 61 கோடி கணக்குகள் திருட்டு
‘ஹேக்கர்ஸ்’ புகுந்த 16 வெப்சைட்ஸ்..! - 61 கோடி கணக்குகள் திருட்டு

டப்ஸ்மேஸ் உள்ளிட்ட 16 இணையதளங்களில் புகுந்த ஹேக்கர்ஸ் 617 மில்லியன் பயன்பாட்டாளர்களின் கணக்குகளை திருடியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நவீன உலகத்தில் இணையதளங்களை அனைவரும் பயன்படுத்துகின்றனர். அத்துடன் இணையதளங்களுக்குள் செல்பவர்கள், அங்கு தங்கள் போன் நம்பர், இ-மெயில் ஐ.டி, பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை பதிவு செய்கின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட 617 மில்லியன் பேரின் கணக்குகளையும், தகவல்களையும் ஹேக்கர்ஸ் திருடியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தத் தகவல்களை அவர்கள் சட்டவிரோத இணையதளங்களுக்கு சுமார் 20 ஆயிரம் பிட் காயின்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக இணைய கணக்குகள் வைத்துள்ளவர்களின் பெயர், இ-மெயில் மற்றும் பாஸ்வேர்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மோசடி கும்பல், இணையதள குற்றங்களில் ஈடுபடுவோரிடம் இந்தத் தகவல்கள் விற்கப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அதிலும், ஹேக்கர்ஸ் கும்பல் 16 இணையதளங்கள் வழியாக மட்டுமே இந்தத் தகவல்களை திருடியுள்ளனர். 

தகவல்கள் திருடப்பட்ட 16 இணையதளங்கள் மற்றும் கணக்குகள் :

டப்ஸ்மேஸ் (Dubsmash) - 162 மில்லியன்

மை ஃபிட்நெஸ் பல் (MyFitnessPal) - 151 மில்லியன்

மை ஹெரிடெஜ் (MyHeritage) - 92 மில்லியன் 

ஷேர் திஸ் (ShareThis) - 41 மில்லியன் 

ஹவுட் லுக் (HauteLook) - 28 மில்லியன் 

அனிமோடோ (Animoto) - 25 மில்லியன் 

ஐ எம் (EyeEm) - 22 மில்லியன் 

8 ஃபிட் (8fit) - 20 மில்லியன்

வொயிட் பேஜஸ் (Whitepages) - 18 மில்லியன்

ஃபோடோலாக் (Fotolog) - 16 மில்லியன் 

500 பிஎக்ஸ் (500px) - 15 மில்லியன் 

ஆர்மர் கேம்ஸ் (Armor Games) - 11 மில்லியன் 

புக் மெட் (BookMate) - 8 மில்லியன் 

காஃபி மீட்ஸ் பாகெல் (CoffeeMeetsBagel) - 6 மில்லியன் 

ஆர்ட்ஸி (Artsy) - 1 மில்லியன் 

டேடா கேம்ப் (DataCamp) -  7,00,000 

இந்தத் தகவல்களை திருடி விற்ற ஹேக்கர்கள் அமெரிக்காவின் புறநகரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனப்படுகிறது. மேற்கண்ட இணையதளங்களில் டப்ஸ்மேஸ் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் குறைந்தபட்சம் ஒருவரிடமாவது விற்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. 

அத்துடன் இந்த 16 இணையதளங்களில் சிலவற்றின் மீது ஏற்கனவே வாடிக்கையாளர்களின் தகவல்களை மற்றவர்களுக்கு கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் சில இணையதளங்களில் தற்போது விற்பனையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்த ஒரு இணையதளத்தில் நமது தகவல்களை கொடுப்பதற்கு முன்பு, அது நமக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான ஒன்றா என்பதை அறிந்து பதிவிட வேண்டும். தேவையற்ற இணையதளங்களில் தகவல்களை கொடுப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com