கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் திருடப்படுகிறதா சுயவிவர தகவல்கள்?

கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் திருடப்படுகிறதா சுயவிவர தகவல்கள்?

கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் திருடப்படுகிறதா சுயவிவர தகவல்கள்?
Published on

இணையதள தேடுபொறிக்கு பெயர்போன கூகுள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையான கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் உலகில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. சில போலி இணையதளங்களின் மூலம் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படுவதாகவும், பணப்பரிவர்த்தனை மூலம் ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது.

இந்நிலையில் கூகுளின் மொழிப்பெயர்ப்பு சேவையான கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் பயனர்களின் பெயர், ஈ மெயில் முகவரி, பாலினம், பணி செய்யுமிடம் போன்ற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுவாக நமக்கு புரிந்தும் புரியாமல் வேறு மொழியில் இருக்கும் சில தகவல்களை நமக்கு தெரிந்த மொழியில் மாற்ற கூகுள் டிரான்ஸ்லேட் அதிகம் பயன்படுகிறது. எனவே இந்த கூகுள் ட்ரான்ஸ்லேட் சேவையை நாள்தோறும் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் ஹேக்கர்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட் பயனாளிகளின் தகவல்களை திருட முயற்சிப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அதனை பயன்படுத்தும் பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூகுள் ட்ரான்ஸ்லேட்டை பயன்படுத்தும் பயனாளர்களின் இமெயில் முகவரிக்கு ஹேக்கர்களால் ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்தப் பிரச்னை தொடர்பாக கூகுள் பதிலளிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் திருட்டு காரணமாக கூகுளின் கூகுள் ப்ளஸ் சமூக வலைத்தளம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com