நவம்பர் 14-ல் திட்டமிட்டப்படி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3- டி2..!

நவம்பர் 14-ல் திட்டமிட்டப்படி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3- டி2..!
நவம்பர் 14-ல் திட்டமிட்டப்படி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3- டி2..!

அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்- 29, ஜிஎஸ்எல்வி மார்க் 3- டி2 ராக்கெட் மூலம் வரும் 14-ஆம் தேதி திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

விண் உலகில் இந்தியாவின் ஆராய்ச்சி வேகமெடுத்து வரும் காலமிது. இந்நிலையில் தற்போது ஜிஎஸ்எல்வி மார்க் 3- டி2 ராக்கெட் மூலம் அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்- 29, நவம்பர் 14-ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணல் செலுத்தப்பட உள்ளது. கஜா புயல் அச்சுறுத்தல் காரணமாக ராக்கெட் ஏவப்படாது எனத் தகவல் வெளியான நிலையில், திட்டமிட்டப்படி ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துத்துள்ளார்.

ஜிசாட்- 29 செயற்கைக்கோளானது மொத்தம் 3423 கிலோ எடை கொண்டது. அதிவேக இணையதள பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட உள்ள ஜிசாட்- 29 மொத்தமாக 10 ஆண்டுகள் தனது பணியினை மேற்கொள்ள உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தகவல் தொலைத்தொடர்புக்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களுக்கு இந்த செயற்கைக்கோளின் பயன்பாடு அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே சந்திராயன் 2 விண்கலத்தை வரும் ஜனவரி 3-ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார். இது ஒருவேளை நடக்காதபட்சத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் சந்திராயன் 2 நிச்சயம் விண்ணில் ஏவப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com