தொடர்ச்சியாக முடக்கப்படும் அரசின் ட்விட்டர் பக்கங்கள் - யுஜிசி ட்விட்டர் கணக்கும் முடக்கம்

தொடர்ச்சியாக முடக்கப்படும் அரசின் ட்விட்டர் பக்கங்கள் - யுஜிசி ட்விட்டர் கணக்கும் முடக்கம்

தொடர்ச்சியாக முடக்கப்படும் அரசின் ட்விட்டர் பக்கங்கள் - யுஜிசி ட்விட்டர் கணக்கும் முடக்கம்
Published on

யுஜிசியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீட்டெடுக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் அரசின் அதிகாரப்பூர்வ மூன்று ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு, சிலரால் முடக்கப்பட்டது. இந்த பக்கத்தை இரண்டு லட்சத்து 96 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். பல்கலைக்கழக மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் ட்விட்டர் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது.



இந்த பக்கம் முடக்கப்பட்ட பின்னர், அதில் அர்த்தமற்ற பதிவுகள், பல்வேறு நபர்களை டேக் செய்து போடப்பட்டு வந்தன. அதன் முகப்பு படத்தில் கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டன. பின்னர் சில மணி நேரத்தில், யுஜிசியின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் மூன்றாவதாக முடக்கப்படும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இதுவாகும். சைபர் கிரைம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com