ஹவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் உறவை முறித்தது கூகுள்
சீன நிறுவனமான ஹவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்துடனான சேவைகள் நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஹவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்தது. இதனால் கூகுள் நிறுவனம் ஹவாய் போன்களுடனான வியாபார ஒப்பந்தங்களையும், சேவைகளும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அத்துடன் கூகுள் மூலம் அதற்கு வழங்கப்பட்ட ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர்களின் உரிமங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது.
அதேசமயம் ஏற்கனவே ஹவாய் போன் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கூகுள் அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம், அப்டேட் செய்துகொள்ளலாம் என்று கூகுளின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் புதிய ஹவாய் ஸ்மார்ட்போன்களில் கூகுள் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யவோ, பயன்படுத்தவோ முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூகுள் மூலம் வழங்கப்பட்டு வந்த கூகுள் பிளே என்ற கேம் வசதிகளும், பாதுகாப்பு சேவையையும் ஹவாய் போனில் திரும்பப் பெறுவதாக கூகுள் அறிவித்துள்ளது.