தந்தையர் தினம் 2021: அழகிய அனிமேஷனுடன் வாழ்த்தும் கூகுள்

தந்தையர் தினம் 2021: அழகிய அனிமேஷனுடன் வாழ்த்தும் கூகுள்

தந்தையர் தினம் 2021: அழகிய அனிமேஷனுடன் வாழ்த்தும் கூகுள்
Published on

தந்தையர் தினத்தை முன்னிட்டு அழகிய அனிமேஷன் ஒன்றை கூகுள் தனது ஹோம்பேஜில் பகிர்ந்துள்ளது அனைவரையும் ரசிக்கவைக்கிறது. 

நமக்கு உறுதுணையாக, நம் வளர்ச்சிக்கு பக்கபலமாக எப்போதும் நம்முடன் இருப்பவர் அப்பா. அப்பாக்களின் தியாகத்தை நினைத்து அவர்களுக்கு நன்றி கூறும்விதமாக இந்த நாளை கொண்டாடுகிறோம். இன்று காலையிலிருந்தே சமூக ஊடகங்களில் அப்பாக்களுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. பெரிய பெரிய நிறுவனங்களும் இந்த நாளில் தந்தையர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும், ஒவ்வொரு ஆண்டும் தந்தையர் தினத்திற்கும் கூகுள் நிறுவனம் அழகிய அனிமேஷன் ஒன்றை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டும் கூகுள் தனது ஹோம் பக்கத்தில் வித்தியாசமான மனதை கவரும் அனிமேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பார்ப்பவர்களை நிச்சயம் உற்சாகமடையச் செய்யும். கூகுள் எழுத்துகளில் இரண்டு எழுத்துகள் குறுஞ்செய்தியை பரிமாறிக் கொள்கின்றன.

Happy Fathers Day to all the Fathers on earth!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com