2021-க்கு டூடுல் போட்டு பிரியா விடை கொடுத்துள்ள கூகுள்!

2021-க்கு டூடுல் போட்டு பிரியா விடை கொடுத்துள்ள கூகுள்!
2021-க்கு டூடுல் போட்டு பிரியா விடை கொடுத்துள்ள கூகுள்!

உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியான கூகுள் தளத்தில் முக்கிய நிகழ்வுகளை டூடுல் போட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த சில மணி நேரங்களில் 2021-ஆம் ஆண்டு நிறைவு பெற உள்ள சூழலில் அதனை குறிப்பிடும் வகையிலும், 2022-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையிலும் 2021-க்கு டூடுல் போட்டு பிரியாவிடை கொடுத்துள்ளது கூகுள். 

உலக மக்களுக்கு மிகவும் சவாலானதாக நிறைந்த 2021-க்கு விடை கொடுத்து 2022-இல் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் அனைவரையும் கவரும் வகையில் க்யூட்டான டூடுல் போட்டுள்ளது கூகுள். 

அந்த டூடுலை க்ளிக் செய்தால் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது. 

புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் மக்கள் கூடி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com