2ஜிபி-க்கு மேல் ரேம் கொண்ட போனுக்கு மட்டுமே ‘ஆண்ட்ராய்டு 11’

2ஜிபி-க்கு மேல் ரேம் கொண்ட போனுக்கு மட்டுமே ‘ஆண்ட்ராய்டு 11’

2ஜிபி-க்கு மேல் ரேம் கொண்ட போனுக்கு மட்டுமே ‘ஆண்ட்ராய்டு 11’
Published on

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் 2ஜிபி அல்லது குறைவான ரேம் ஸ்டோரேஜ் கொண்ட போன்களில் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் கோடிக்கணக்கானோர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் நிலையில், அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இயங்குதளமாக ஆண்ட்ராய்டு உள்ளது. மைக்ரோசாஃப், ஓஎஸ் உள்ளிட்ட பிற இயங்குதளங்கள் இருந்தாலும், ஆண்ட்ராய்டு அளவிற்கு மக்களின் பயன்பாடு அதற்கு இல்லை. இதனால்பெருவாரியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இயங்குதளமாக ஆண்ட்ராய்டு உள்ளது.

ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் என்பது அப்டேட் செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது. காலகத்திற்கு தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஆண்ட்ராய்டு இயங்குதளமானது 6,7,8,9,10 என தொடர்ந்து அப்டேட் ஆகிக்கொண்டே செல்கிறது. இதனை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு ஆப்ஷனை கிளிக் செய்து அப்டேட் செய்யலாம். இந்நிலையில் ஆண்ட்ராய்டு 11ஐ கூகுள் தயாரித்துள்ளது. தற்போது சோதனைப் பயன்பாட்டில் இருக்கும் இந்த இயங்குதளம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை 2ஜிபி அல்லது அதற்கு குறைவான ரேம் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஜிபி ரேம் ஸ்டோரேஜ்க்கு மேல் உள்ள ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 11 மூலம் கூடுதல் செயலிகளை இன்னும் வேகமாக செயல்படுத்த முடியும் எனப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com