மால்வேர் அலர்ட் காரணமாக பிளே ஸ்டோரிலிருந்து ஏழு அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்!
ஆன்லைன் மூலமாக பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை களவாடுவது மற்றும் மோசடி செய்வது மாதிரியான குற்றங்கள் அண்மைய காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மால்வேர் அலர்ட் காரணமாக பிளே ஸ்டோரிலிருந்து ஏழு அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
காஸ்பர்ஸ்கி நிபுணர் ஒருவர் பிளே ஸ்டோரில் சில அப்ளிகேஷனில் மால்வேர் இருப்பதைக் கண்டுபிடித்தார். பயனர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த அப்ளிகேஷன் குறித்து விவரங்களையும் சொல்லி இருந்தார். அதன் பேரில் கூகுள் தற்போது அந்த அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது.
QR கோட் ஸ்கேன், எமோஜி ஒன் கீபோர்ட், பேட்டரி சார்ஜிங் அனிமேஷன்கள் பேட்டரி வால்பேப்பர், Dazzling கீபோர்டு, வால்யூம் பூஸ்டர் லவுட் சவுண்ட் ஈக்வலைசர், சூப்பர் ஹீரோ எஃபெக்ட் மற்றும் கிளாசிக் எமோஜி கீபோர்ட் மாதிரியான அப்ளிகேஷன்கள் கூகுள் நீக்கியுள்ள பட்டியலில் உள்ளன.
இந்த அப்ளிகேஷன்களை முன்னதாகவே இன்ஸ்டால் செய்துள்ள பயனர்கள் உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.