இணைய தேடலின்போது குறிப்பிட்ட ஒரு சொல்லினை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது அது தொடர்பாக சில தேடல் முடிவுகளை காட்டுதலே இன்ஸ்டண்ட் சர்ச் (Instant Search). அதாவது உடனடி தேடல்.
கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.
முன்னதாக, பயனாளர்களின் ரகசியத் தகவல்களை திருடும் வேலையை செய்த காரணத்தால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 20 ஆப்ஸ்களை கூகுள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.