கூகுள் மேப்பில் இனி சுங்கக் கட்டணத்தையும் அறியலாம்! புதிய அப்டேட் சொல்வதென்ன?

கூகுள் மேப்பில் இனி சுங்கக் கட்டணத்தையும் அறியலாம்! புதிய அப்டேட் சொல்வதென்ன?
கூகுள் மேப்பில் இனி சுங்கக் கட்டணத்தையும் அறியலாம்! புதிய அப்டேட் சொல்வதென்ன?

`சுங்கக் கட்டணச் சாலைகளில் சென்றால் எவ்வளவு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்’ என்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

பயணத்திற்கு வழிகாட்டும் மொபைல் செயலி சேவைகளில் புகழ்பெற்றது கூகுள் மேப் செயலி. காலத்திற்கேற்ப தன்னை அப்டேட் செய்துகொள்ளும் கூகுள் நிறுவனம், அந்தவகையில் தற்போது சுங்கக் கட்டணச் சாலைகளில் சென்றால் எவ்வளவு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் காரில் பயணிக்கும் பயனர்கள், புறப்படும் இடம் மற்றும் சென்று சேர வேண்டிய இடத்தை கூகுள் மேப்பில் குறிப்பிட்டால், சுங்கக் கட்டணம் எவ்வளவு என்ற விவரங்களை பெறலாம்.

உள்ளூர் சுங்கக் கட்டண அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கூகுள் மேப்ஸ் இவற்றை வழங்குகிறது. கட்டணமில்லா வழிகளைக்கூட அடையாளம் கண்டு அதில் பயணிக்கவும் கூகுள் மேப்பின் புதிய அப்டேட் வழிசெய்யவுள்ளது. இது பயணங்களை சிறப்பாக திட்டமிட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் புதிய அம்சம் வெளிவருகிறது. பயணிக்கும் நாள், நேரம், கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, பயனர்கள் தங்கள் வழித்தடத்தில் உள்ள சுங்கக் கட்டண தொகையை கணக்கிட கூகுள் மேப் உதவுகிறது. 2000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் பற்றிய விவரங்களை வழங்கும் வகையில் கூகுள் மேப்பின் புதிய அப்டேட் இருக்கும். இந்த மாதத்தின் பிற்பகுதியில் புதிய அம்சம் வெளிவரும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com