குரோம் 89 என்ற புதிய பிரவுசரை லான்ச் செய்த கூகுள் நிறுவனம்!

குரோம் 89 என்ற புதிய பிரவுசரை லான்ச் செய்த கூகுள் நிறுவனம்!
குரோம் 89 என்ற புதிய பிரவுசரை லான்ச் செய்த கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் குரோம் 89 என்ற புதிய பிரவுசர் வெர்ஷனை லான்ச் செய்துள்ளது.

அதிவேக செயல்பாடு மற்றும் அதிக திறன் கொண்ட நினைவகமும் இதில் இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த புதிய வெர்ஷன் வின்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த புதிய குரோம் 89 பிரவுசரை பயன்படுத்தும் போது பார்க்க முடிவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. 

விண்டோஸில் ஒவ்வொரு டேபிலும் சராசரியாக 100 எம்பி வரையிலான மெமரியை மீட்டெடுக்க குரோம் 89 உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமாக பயன்படுத்தப்படும் டேபில் 20 சதவிகிதம் வரை மெமரியை சேமிக்க உதவுவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. 

இதே போல ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட போன்களில் லைவ் கேப்ஷன் வசதியையும் இந்த பிரவுசர் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com