ஆன்லைனில் உள்ள போட்டோகளின் வாட்டர் மார்க்கை நீக்கும் புதிய தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஒரு நிறுவனத்தின் பிரத்யேக புகைப்படங்களை பிறர் பயன்படுத்தாமல் இருக்க அந்த புகைப்படத்தின் மேல் வாட்டர் மார்க் செய்யப்படுவது வழக்கம். இதல் உள்ள எழுத்துகள் அல்லது லோகோவை போட்டோஷாப் மூலம் கட் செய்து எடுக்க முடியும். ஆனால் போட்டோஷாப் இல்லாமல் அந்த எழுத்துகளை நீக்கும் புதிய வழிமுறையை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
Algorithm என்று குறிப்பிடப்படும் இந்த தேடு பொறி வழிமுறை, போட்டோகளில் வாட்டர் மார்க் உள்ளதை நீக்குவது எப்படி என்பதை கம்ப்யூட்டருக்குக் கற்பிக்கும் விதமாக ஒரு மென்பொருளை உருவாக்கி இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் படங்களை ஸ்கேன் செய்வதன் மூலம் வாட்டர்மார்க் தானாகவே அழியும் என தெரிவிக்கின்றனர். விரைவில் இது பொதுபயன்பாட்டுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

