ஹோல் பஞ்ச்சின் ஆண்டு விழாவை கொண்டாடும் கூகுள் டூடுள்!

ஹோல் பஞ்ச்சின் ஆண்டு விழாவை கொண்டாடும் கூகுள் டூடுள்!

ஹோல் பஞ்ச்சின் ஆண்டு விழாவை கொண்டாடும் கூகுள் டூடுள்!
Published on

காகிதத்தில் துளை போடப் பயன்படும் ’ஹோல் பஞ்ச்’ இயந்திரத்தின் 131 வது ஆண்டு விழாவை நினைவூட்டும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது. 

தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ச்சி அடைந்தபோதும், விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்கப்பட்ட சில சாதனங்கள் இன்றளவும் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதில் குறிப்பிடும்படியான ஒன்று காகிதத்தில் துளைப் போடப் பயன்படும் ‘ஹோல் பஞ்ச்’ இயந்திரம். ஜெர்மன் விஞ்ஞானி ப்ரீட்ரிக் ஸீனெக்கென் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்தார். 1886, நவம்பர்14ல் இதற்கான காப்புரிமையைப் பதிவு செய்தார். நாளடைவில் தனியாக இயந்திரத்தை வடிவமைக்கும் தொழிற்சாலை அமைத்து சொந்தமாகவே இந்த இயந்திரத்தை பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பினார். 

ப்ரீட்ரிக்கின் இந்த அறிய கண்டுப்பிடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது. அன்று முதல் இன்று வரை வங்கி, அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் இந்த ஹோல் பஞ்ச் இயந்திரம் அத்தியாவசிய பொருளாக மாறி உள்ளது. இந்த இயந்திரம் தனது 131 வது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறது. இதனை அனைவருக்கும் நினைவூட்டும் விதமாக பிரபல தேடல் நிறுவனமான கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வண்ண நிறமான கூகுள் டூடுள் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com