ஹிப் ஹாப் இசையை போற்றும் கூகுள்

ஹிப் ஹாப் இசையை போற்றும் கூகுள்

ஹிப் ஹாப் இசையை போற்றும் கூகுள்
Published on

கூகுளின் டூடுல் சேவை, உலகின் சில முக்கிய நிகழ்வுகள் மற்றும் பிரபலங்களை பெருமைப்படுத்தும் விதமாக வித்தியாசமான படங்களையும் அனிமேஷன் இமேஜையும் வடிவமைத்து வருகிறது. இந்த வித்தியாசமான டூடுல் மூலம் கூகுள் அதன் பயனருக்கு அந்த முக்கிய நிகழ்வுகளை நினைவு கூர்கிறது. அந்தவகையில், தற்போது டூடுலில் ஹிப் ஹாப் இசை பிறந்து 44 ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் வீடியோவாக வைத்து ஹிப் ஹாப் இசையை பெருமைப்படுத்தியுள்ளது.

முதன்முறையாக 1973 ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹிப் ஹாப் இசை பிறந்தது. நியூயார்க் நகரில் முதன்முறையாக ஹிப் ஹாப் இசை வெளியானது. ஆனால் தற்போது இந்தியாவிலும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் ஆட்டிவைத்து வருகிறது ஹிப் ஹாப். ஹிப் ஹாப்பில் ராப் இசை, தடை ஆட்டம், சுவரோவியம் (Graffiti), Beat-boxing, Turntablism (DJ கலை) ஆகிய ஐந்து வகைகள் உள்ளன.

மேலை நாட்டு கலாச்சாரமாக இருந்த ஹிப் ஹாப், ஆட்டம் பாட்டத்துடன் இசையை வெளிபடுத்துகிறது. ஹிப் ஹாப் பிறப்பை சிறப்பிக்கும் வகையாக கூகுள் தனது டூடுலில் வீடியோவை பதிவு செய்து கெளரவித்துள்ளது. 

இதுவரை ஜிஃப் பைல், இமேஜ், கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷனில் தனது டூடுல் பக்கத்தில் அலங்கரித்த கூகுள் முதன்முறையாக ஹிப் ஹாப் இசை நிகழ்வு குறித்த தொகுப்பை வீடியோவாக பதிவு செய்து கெளரவித்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com