\
கதக் நடனக் கலையின் பேரரசியை நினைவுகூர்ந்த டூடுல்

கதக் நடனக் கலையின் பேரரசியை நினைவுகூர்ந்த டூடுல்

கதக் நடனக் கலையின் பேரரசியை நினைவுகூர்ந்த டூடுல்
Published on

கதக் பைங்கிளி என வர்ணிக்கப்படும் சித்தாரா தேவியின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்துள்ளது கூகுள் டூடுல்.

கதக் நடனத்தில் பேர் போன சித்தாரா தேவி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1920-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் தனலட்சுமி. தந்தை கதக் நடனத்தில் தேர்ந்தவர். அவரைப் போலவே சித்தாரா தேவி கதக் நடனத்தில் பெயர் பெற்றவராக விளங்கினார். சுமார்  60 ஆண்டுகள் கதக் நடனத்தில் சிறந்து விளங்கிய சித்தாராவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டிய நங்கையை நினைவு கூறும் விதமாக கூகுள் நிறுவனம் தனது டூடுல் பக்கத்தில் அவரின் நாட்டியத்துடன் கூடிய புகைப்படத்தை அலங்கரித்துள்ளது. உலக புகழ் பெற்ற சித்தாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, சங்கீத நாடக அகாடமி, பத்மிஸ்ரீ, காளிதாஸ் சம்மன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. தனது வாழ்வை நடனத்துக்கு அர்ப்பணித்த சித்தாரா கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் தனது 94வது வயதில் காலமானார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com