அமெரிக்கன் மற்றும் மெக்சிகன் இசைக்கு அடையாளமாக விளங்கிய செலினா குவிண்டனிலாவை நினைவுகூறும் வகையில் கூகுள் டூகுள் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.
டெஜானோ இசை உலகின் ராணி என அழைக்கப்படும் செலினா குவிண்டனிலா ஏப்ரல் 16, 1971 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் டெஜானோ இசை கலையில் புகழ்பெற்ற முதல் பெண் பாடகி ஆவார். இசை உலகில் ஆண் ஆதிக்கம் நிறைந்த காலத்தில் தனது திறமையால் தனக்கென தனி ரசிகர்களை அமைத்துக் கொண்டவர் செலினா. மேலும் இவர் 1993-ஆம் ஆண்டு மெக்சிகன்-அமெரிக்க ஆல்பம் பிரிவில் முதல் கிராமிய விருதையும் வென்றுள்ளார்.
மேலும் செலினா, டெஜானோ இசை கலைஞர் மட்டுமல்ல, சமூக ஆர்வலர், தொழில் முனைவர். ஃபேஷன் துறையிலும் கால் பதித்து வெற்றி கண்டவர். அதேபோல்1989 ஆம் ஆண்டு செலினாவின் முதல் இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. இத்தகைய சிறப்பான நாளை அனைவருக்கும் நினைப்படுத்தும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் செலினா குவிண்டனிலாவின் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.